follow the truth

follow the truth

October, 31, 2024
HomeTOP2"20 வருடங்கள் எனக்கு வேண்டாம். ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள்"

“20 வருடங்கள் எனக்கு வேண்டாம். ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள்”

Published on

கல்முனை மாநகர சபையின் முதல்வராக இருந்த காலத்தில் எமது சபையை ஒரு ஊழல்களற்ற மாநகர சபையாகவும், நாட்டிலுள்ள சபைகளைவிட சிறந்தொரு சபையாக மாற்றியமைத்த பெருமை எனக்கும், உங்களுக்கும் உள்ளது என்று, கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் திகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சாய்ந்தமருது பொதுத்தேர்தல் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே சிராஸ் மீராசாஹிப் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

“.. நீங்கள் தந்த அமானிதத்தின் மூலம் எனக்குக் கிடைத்த முதல்வர் பதவியின் ஊடாக, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உதவிகளைப் பெற்றுக்கொண்டு கல்முனை மாநகரத்தை பல்வேறுபட்ட அபிவிருத்திப் பாதையில் கொண்டு சென்றதை நீங்கள் அறிவீர்கள்.

இன மத வேறுபாடின்றி வாழ்வாதார உதவிகள், பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், விளையாட்டுக் கழகங்களுக்கான உபகரணங்கள், திண்மக் கழிவகற்றல் முறையில் எவ்வித தடைகளுமின்றிய நடைமுறை போன்ற பல்வேறுபட்ட விடயங்களைச் செய்ய ஒரு பம்பரம் போன்று இயங்கி வந்ததையும் கண்ணூடாகக் கண்டீர்கள்.

எனது இந்த சேவையை அம்பாறை மாவட்டத்திலுள்ள எல்லா மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற சிந்தனையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும், அதன் தலைமையும் முடிவெடுத்து இத்தேர்தலில் என்னை களம் இறக்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் இன மத வேறுபாடின்றிய சேவைகளை வழங்கி வைக்க ஒரேயொரு சந்தர்ப்பத்தைத் தாருங்கள் என்று நான் கேட்கிறேன். எனக்கு 20 வருடங்கள் வேண்டாம். எனது செயற்பாடுகளையும், வேலைத்திட்டங்களையும் நீங்கள் அவதானித்து அதன் பின்னர் முடிவெடுத்துக் கொள்ளுங்கள்..” என்றார்.

இந்த தேர்தலில் காரியாலய திறப்பு விழாவில் உலமாக்கள், முன்னாள் பிரதேச சபை தவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மாநகர சபை உறுப்பினர்கள், கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள், கட்சிப் போராளிகளென பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“இஸ்ரேல் போரை நிறுத்த முடிவு செய்தால் ஏற்போம்.. ஆனால் கெஞ்சமாட்டோம்”

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே ஓராண்டைக் கடந்து போர் நடைபெற்று வரும் சூழலில் இதுவரை 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்...

“எனக்கு எந்த சலுகைகளும் வேண்டாம், பாதுகாப்பு தேவைப்படுவோருக்கு வழங்குங்கள்”

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனக்கு எந்தவித சலுகைகளும்...

“இந்த அரசாங்கம் கடன் வாங்கும் வேகத்தைப் பார்த்தால் பயமாக இருக்கிறது” – மனுஷ

இந்த அரசாங்கம் கடன் வாங்குவதோடு மட்டுமன்றி பணத்தையும் அச்சிட ஆரம்பித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். காலியில் நடைபெற்ற...