follow the truth

follow the truth

October, 31, 2024
HomeTOP1"இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்"

“இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்”

Published on

இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்திருந்தார்.

பிரதமரின் தீபாவளி வாழ்த்துச் செய்தி

இந்த விழாவின் ஒளி நம் இல்லங்களை ஒளிரச் செய்வது மட்டுமல்லாமல், நீதி, கருணை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் ஆழமான உணர்வை நம் இதயங்களில் ஒளிர வைக்கட்டும். இருளின் மீது ஒளியின் வெற்றியைக் கொண்டாடும் நாம், கட்டமைப்பு ரீதியான பாரபட்சங்கள் மற்றும் விளிம்பு நிலைக்குள்ளாக்கப்படல் என்பவற்றுக்கு எதிராகப் போராடுபவர்களின் தொடர்ச்சியான போராட்டங்களை நினைவுபடுத்திக் கொள்வோம்.

அனைவரும் சுதந்திரம், கண்ணியம் மற்றும் உரித்தை அனுபவிக்கக் கூடிய ஒரு உலகைக் கட்டியெழுப்ப நாம் மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் இது.

‘வளமான தேசம் – அழகான வாழ்க்கை’ என்ற எமது அரசியல் கொள்கையின் மூலம் எங்கள் கூட்டு இலக்கானது அனைவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும், அனைவரையும் உள்ளடக்குவதை உறுதி செய்வதும் ஆகும்.

இந்த தீபாவளி அனைவரது வாழ்க்கையிலும் ஒளியையும், மகிழ்ச்சியையும், புதுப்பித்தலையும் தரட்டும்.
இன்று தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் மகிழ்ச்சியான, அர்த்தமுள்ள, அமைதியான தீபாவளி வாழ்த்துக்கள்

Dr. ஹரிணி அமரசூரிய
பிரதமர்
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு
31.10.2024

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு

கிராமப்புற வறுமையை ஒழிப்பதே அரசாங்கத்தின் முதன்மையான இலக்கு என ஜனாதிபதி தெரிவித்துள்ளார் கிராமிய வறுமையை ஒழிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் முக்கியமான...

தேங்காய் தட்டுப்பாடு அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும்

நாட்டில் தேங்காய் உற்பத்தி வீழ்ச்சி அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை தொடரும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம்...

பன்றிக்கு பரவிய பறவைக் காய்ச்சல்

அமெரிக்காவில் முதன் முறையாக H5N1 பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பன்றி அடையாளம் காணப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள பண்ணை...