கடந்த அரசாங்கங்களில் கடவுச்சீட்டுக்கான வரிசைகள் இருந்தபோது, அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தினால் அந்த வரிசைகள் உருவாக்கப்பட்டதாக தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
இன்றைய அரசாங்கம் அவசியமானால் மட்டுமே கடவுச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கூறுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இன்னும் சில நாட்களில் அரிசி தேவையென்றால் மட்டும் வாங்குங்கள். தேங்காய் தேவை என்றால் மட்டும் வாங்குங்கள் என்று இந்த அரசு கூறக்கூடும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.