இலங்கை ஆசிரிய ஆலோசகர் சேவையின் சம்பள அளவுகளில் காணப்படும் முரண்பாடுகளை நிவர்த்தித்து, சம்பளத்தை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மாஅதிபர் உயர் நீதிமன்றத்திற்கு இன்று(29) அறிவித்துள்ளார்.
ஆசிரிய ஆலோசகர்களின் சம்பளங்களில் நிலவும் முரண்பாடுகளை நீக்குமாறு கோரி, அகில இலங்கை ஆசிரிய ஆலோசகர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளங்களுக்கிடையே சில முரண்பாடுகள் காணப்பட்டாலும் எதிர்காலத்தில் அந்த முரண்பாடுகளை நிவர்த்திசெய்து சம்பளத்தை செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் யுரேஷா டி சில்வா தெரிவித்தார்.