இலங்கையில் வட்ஸ்அப் கணக்குகளுக்கு அங்கீகரிக்கப்படாத ஊடுருவல் அதிகரித்து வருவதாகவும் இணைய குற்றவாளிகள் சரிபார்ப்பு குறியீடுகள் (verification codes) மூலம் மக்களின் கணக்குகளை அணுகுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வட்ஸ்எப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் ஊடாக பெறப்படும் போலியான செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இணைய மோசடியாளர்கள் போலி இணையத்தளங்கள், சமூக ஊடகங்கள், குறுஞ்செய்திகள் மற்றும் வட்ஸ்எப் செய்திகள் ஊடாக உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் என இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றம் தெரிவித்துள்ளது.
வட்ஸ்அப் பயனர்கள் verification codeகளை பெறுவதற்கு தெரிந்தவர்கள் போலவோ அல்லது நண்பர்கள் போலவோ பாவனை செய்வதும் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு முறை அவ்வாறு சரிபார்ப்பு குறியீடுகள் பகிரப்பட்டால் அனைத்து கணக்குகளையும் இணையக் குற்றவாளிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
தங்கள் கணக்குகள் ஊடுருவல் செய்யப்பட்டால் உடனடியாக சமூக வலைதளங்கள் ஊடாக தமக்கு தெரிந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் அறிக்க வேண்டும்.
மேலதிகமாக தங்களது கணக்குகளுக்கு இரண்டாம் நிலை சரிபார்ப்பு குறியீடுகளை (two-step verification) செயற்படுத்தி வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.