அறுகம்பே சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இரகசிய அறிக்கையொன்று அதிகாரிகள் இன்று(29) கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேனவிடம் சமர்ப்பித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
முன்வைக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த கொழும்பு மேலதிக நீதவான், விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அடுத்த வழக்கு தவணையில் நீதிமன்றில் முன்வைக்குமாறு உத்தரவிட்டார்.