இலங்கையின் அனைத்து பிரதேச செயலகங்களுக்கும் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் தொற்று அல்லது அபாயகரமான பகுதிகள் என பெயரிட்டு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகம் சந்திரிகா ஹேமாலி அபேரத்னவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி கடந்த 25ஆம் திகதி முதல் மூன்று மாதங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக காய்ச்சல், பன்றி இனப்பெருக்கம் மற்றும் சுவாச மற்றும் நோய் அறிகுறிகளை கட்டுப்படுத்தவும் தடுக்கவும் தேவையான பின்வரும் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. .
* ஆபத்தில் உள்ள பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தயாரிப்புகள் அல்லது நோயை உண்டாக்கும் பொருட்களை தொற்று அல்லது ஆபத்தில் உள்ள பகுதிகளின் வௌியே கொண்டு செல்வது, அகற்றுவது அல்லது விரட்டுவது.
* பாதிக்கப்பட்ட விலங்குகளை கொலை செய்தல்.
* நோய் அபாயத்தில் உள்ள விலங்குகளுக்கு செயற்கை இனப்பெருக்க முறைக்கு பயன்படுத்துதல்.
* ஆபத்தான விலங்குகளைப் பயன்படுத்தி நேரடி விலங்கு சந்தைகள், கண்காட்சிகள் மற்றும் போட்டிகளை நடத்துதல்.
* பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் அதன் தயாரிப்புகள் மற்றும் நோயை உண்டாக்கும் பொருட்களை விற்பனை செய்தல், மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்தல் அல்லது விநியோகித்தல்.
* குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை தண்ணீர் சம்பந்தப்பட்ட எந்த இடத்திலும் விட்டுச் செல்லுதல்.
* குறித்த நோய் தொற்று காரணமாக இறந்ததாகவோ அல்லது பாதிக்கப்பட்டதாகவோ சந்தேகிக்கப்படும் விலங்குகளின் சடலம் அல்லது பாகங்களை ஏனைய விலங்குகளால் வேறு இடத்திற்கு அல்லது பகுதிக்கு எடுத்துச் செல்லக்கூடிய இடத்தில் வைப்பது அல்லது நிலைப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.