follow the truth

follow the truth

November, 30, 2024
HomeTOP1வீடியோ எடுப்பதற்கு தடையில்லை - ஆனால் பக்கச்சார்பான முறையில் வீடியோக்களை எடுக்க முடியாது

வீடியோ எடுப்பதற்கு தடையில்லை – ஆனால் பக்கச்சார்பான முறையில் வீடியோக்களை எடுக்க முடியாது

Published on

சமூகத்தில் இடம்பெறும் நிகழ்வொன்றை வீடியோ எடுப்பதற்கு தடையில்லை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் வாகன விபத்து தொடர்பான காணொளி பதிவு தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்று (29) அமைச்சரவை செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு சம்பவம் இடம்பெறும் போது அதனை காணொளியாக பதிவு செய்ய சந்தர்ப்பம் உள்ளதாகவும், ஆனால் அது தமக்கு பாதகமாக அமையும் என ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தால் அதனை வீடியோவாக எடுக்க முடியாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கமராக்களை கூட மற்ற வீடுகள் தெரியும் வகையில் பொருத்த அனுமதி இல்லை என்றும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், முன்னாள் அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பாதுகாப்பு அதிகாரிகளின் வாகனம் விபத்துக்குள்ளான போது, ​​வாகனத்தில் கமெராவை பயன்படுத்திய நபருக்கு வீடியோ எடுக்க அனுமதியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற காலநிலை – சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய...

பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

பதுளை, கண்டி, கேகாலை, மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு, கம்பஹா,...

பதுளை – எல்ல இடையிலான ரயில் சேவை பாதிப்பு

ஹாலிஎல, உடுவர பகுதியில் ரயில் கடவையில் சரிந்து வீழ்ந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணிகள் இன்றும் முன்னெடுக்கப்பட்டது. இதன்காரணமாக...