follow the truth

follow the truth

November, 30, 2024
HomeTOP1அமெரிக்கா பயணத்தடை விதிக்கவில்லை - விஜித ஹேரத்

அமெரிக்கா பயணத்தடை விதிக்கவில்லை – விஜித ஹேரத்

Published on

இலங்கையில் நடத்த திட்டமிடப்பட்ட தாக்குதல் தொடர்பில் வெளிநாட்டு புலனாய்வு நிறுவனம் சில தகவல்களை இலங்கை புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கியதாகவும், அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர், அதற்கமைவாக தேசிய பாதுகாப்புச் சபைகளைக் கூட்டி விரைவான தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், இந்த புலனாய்வு அமைப்புகள் நாட்டில் செல்வாக்கு செலுத்தவில்லை எனவும், அறுகம்பே பகுதிக்கு விஜயம் செய்வதில் அவதானமாக இருக்குமாறு அமெரிக்கா அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், அவ்வாறு இல்லாமல் பயணத்தடை விதிக்கப்படவில்லை எனவும் கூறப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம்

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்தின் படி இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருளின் விலையில்...

வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்ந்து நீடிப்பு

மகாவலி கங்கை ஆற்றுப்படுகை மற்றும் தெதுரு ஓயா ஆற்றுப்படுகைக்கு வழங்கப்பட்டுள்ள வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை அடுத்த 24...

சீரற்ற காலநிலை – சிறுவர்களிடையே நோய் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக தற்போது சிறுவர்களிடையே நோய்கள் அதிகரித்துள்ளதாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய...