ஜப்பான் பொதுத் தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தலில் பிரதமர் ஷிகெரு இஷிபாவின் ஆளும் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையை இழந்துள்ளது. இது, பிரதமர் ஷிகெரு இஷிபாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ள நிலையில், தற்போது ஆட்சியமைக்க கூட்டணிக்கு வெளியே பிற கட்சிகளின் ஆதரவைத் தேடுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மொத்தமுள்ள 465 இடங்களில் லிபரல் ஜனநாயகக் கூட்டணி 215 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. ஆனால், பெரும்பான்மை பெறுவதற்கு 233 இடங்கள் தேவை.