follow the truth

follow the truth

October, 28, 2024
HomeTOP2திடீரென கத்தார் பறந்த இஸ்ரேலின் 'மொசாட்' தலைவர்

திடீரென கத்தார் பறந்த இஸ்ரேலின் ‘மொசாட்’ தலைவர்

Published on

மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தில் உள்ள நிலையில், இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டின் தலைவர் கத்தாருக்கு பயணம் மெற்கொண்டுள்ளார்.

இந்த பயணத்தின் போது ஹமாஸ் அமைப்பினர் பிடித்து சென்ற பணையக்கைதிகளை விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பலஸ்தீனத்தின் காசா நகரை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் நீடித்து வந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியது.

இதில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன் 250 பேர் பணையக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் பிடித்து செல்லப்பட்டனர். இதனால் கோபம் அடைந்த இஸரேல், ஹமாஸ் அமைப்பினரை ஒழித்து கட்டாமல் விட மாட்டோம் எனக்கூறி ஹமாஸுக்கு எதிராக மீது முழு அளவிலான போரை தொடுத்துள்ளது.
ஹமாஸுக்கு ஆதரவாக உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள், லெபானனில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினரும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், இந்த அமைப்புகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவின் முக்கிய தலைவர்கள் இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டதால், கோபம் அடைந்த ஈரான், கடந்த மாதம் இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணை கொண்டு தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல், நேற்று முன் தினம் அதிகாலை ஈரானில் உள்ள முக்கிய ராணுவ தளங்களை குறிவைத்த வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் கூறியுள்ளதால் மத்திய கிழக்கில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. பாலஸ்தீனத்தின் காசா, லெபனான், ஈரான், சிரியா, ஈராக் என 5 இஸ்லாமிய நாடுகளுடன் இஸ்ரேல் மோதி வருகிறது. இத்தகைய சூழலில் இஸ்ரேலின் சக்தி வாய்ந்த உளவு பிரிவு அமைப்பான ‘மொசாட்’ டின் தலைவர் கத்தார் சென்றுள்ளார்.

மொசாட் அமைப்பின் தலைவரான டேவிட் பர்னியே கத்தார் தலைநகர் தோஹாவிற்கு சென்றார். காசாவில் உள்ள பணையக்கைதிகளை மீட்பது தொடர்பாக ஆலோசிக்க மொசாட் தலைவர் கத்தார் சென்று இருப்பதாக சொல்லப்படுகிறது. கத்தாரில் வைத்து அமெரிக்க உளவு அமைப்பின் தலைவர் வில்லியம்ஸ் பர்ன்ஸ் மற்றும் கத்தார் பிரதமர் ஷெக் முகம்ம்து பின் அப்துல்ரஹ்மான் பின் ஜஸ்சிம் அலி ஆகியோரையும் சந்தித்து பேசவுள்ளாராம்.

சமீபத்திய பதற்றத்திற்கு இடையே, மொசாட் உளவு பிரிவு அமைப்பின் தலைவர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீண்டும் ரயில் தடம்புரள்வு – ரயில் சேவையில் பாதிப்பு

கொழும்பு கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் தடம் புரண்டதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று (28)...

ஜப்பான் தேர்தல் – பெரும்பான்மையை இழந்த ஆளும் கட்சி

ஜப்பான் பொதுத் தேர்தலில் இதுவரை வௌியான முடிவுகளின் பிரகாரம் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறவில்லை என சர்வதேச செய்திகள்...

சந்தையில் வீழ்ச்சியடைந்த முட்டையின் விலை

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சந்தையில் முட்டை விலை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று (28) சிவப்பு முட்டை ஒன்று 36...