follow the truth

follow the truth

October, 1, 2024
Homeஉள்நாடுசிறுவர்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

சிறுவர்களுக்கான மரண தண்டனை தொடர்பான குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம்

Published on

இலங்கையின் குற்றவியல் நடைமுறை தொடர்பான சட்டத்தின் 281வது பிரிவைத் திருத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நீதிமன்றத்தின் தத்துவப்படி குற்றமிழைக்கும் சந்தர்ப்பத்தில் 18 வயதுக்குக் குறைவான எந்தவொரு நபருக்கும் மரண தண்டனையை விதிக்க கூடாது

இதற்கு பதிலாக ஜனாதிபதி விரும்பும் வரை தடுப்புக் காவலில் வைத்திருக்கும் வகையில் தண்டனைச் சட்டக்கோவையில் 53 ஆம் உறுப்புரையை திருத்தம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், 18 வயதுக்குக் குறைவாக இருப்பின் மரண தண்டனை விதிக்கப்படக் கூடாதெனக் கூறும் ஏற்பாடுகள் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 281 ஆம் உறுப்புரையில் குறிப்பிடப்படவில்லை.

அதனால், நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மையை நீக்குவதற்காக குற்றவியல் வழக்குக் கோவைச் சட்டத்தில் குறித்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 281 ஆவது உறுப்புரையை திருத்தம் செய்வதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    

லெபனான் மற்றும் சிரியாவிற்கு பயணிப்பதை தவிர்க்குமாறு ஆலோசனை

மறு அறிவித்தல் வரை லெபனான் மற்றும் சிரியாவுக்கான பயணிப்பதை தவிர்க்குமாறு இலங்கையர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது லெபனான்...