உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.ஐ.இமாமின் அறிக்கை இன்று (28) பிவித்துரு ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் வெளியிடப்படும் என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
அதன்படி இன்று காலை 10 மணிக்கு கட்சியின் தலைமையகத்தில் வைத்து ஊடகங்களுக்கு இந்த அறிக்கை வெளியிடப்பட உள்ளது.
உதய கம்மன்பில உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.என்.ஜே. டி அல்விஸ் இனது அறிக்கையினை கடந்த 21ஆம் திகதி முதன்முறையாக ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.
அந்த அறிக்கையின்படி, முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்ன, பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக இருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஷானி அபேசேகர ஆகியோர் குற்றவாளிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்திருந்தார்.