follow the truth

follow the truth

October, 27, 2024
HomeTOP2இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்

இஸ்ரேல் தாக்குதலுக்கு.. சூடாக ரெடியாகும் ஈரான்

Published on

இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலுக்கு ஈரான் பதிலடி தரப்போவதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஈரான் இராணுவம் ட்வீட் ஒன்று செய்துள்ளது.

ஈரான் இராணுவம் சார்பாக செய்யப்பட்டுள்ள போஸ்டில், டிக் டாக்.. 3வது #TruePromise3 அட்டாக் என்று குறிப்பிட்டு உள்ளனர். முன்னதாக #TruePromise1 #TruePromise2 என்ற பெயரில் இஸ்ரேலில் ஒரே நாளில் ஈரான் இரண்டு கட்டமாக தாக்கியது. இதனால் 3வது கட்டமாக ஈரான் இஸ்ரேல் மீது தாக்க போகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஈரான் நாட்டு அரசு தனது இராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.

நேற்றுதான் ஈரான் மீது மூன்று துல்லியமான தாக்குதல்களை இஸ்ரேல் நடத்தி உள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

குறிப்பாக ஈரானில் மக்கள் வசிக்கும் பகுதிகளை குறி வைக்காமல்.. இராணுவ இலக்குகளைத் தாக்கி உள்ளது இஸ்ரேல். அணு மற்றும் எண்ணெய் உற்பத்தி மையங்களை தவிர்த்து.. மேற்கொண்டு மோதலை தவிர்க்கும் விதமாக இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்தி உள்ளது.

இஸ்ரேல் வெளியிட்ட ஊடக அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய இராணுவம் ஈரானின் இராணுவ தளங்களில் மட்டுமே கவனம் செலுத்தியது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான மோதல் மேலும் அதிகரிப்பதை தடுக்க அணு மற்றும் எண்ணெய் மையங்களை தவிர்த்து இஸ்ரேல் ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்த தாக்குதல் தற்போது நிறைவு பெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தங்களின் தாக்குதல் வெற்றிபெற்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்து உள்ளது. ஈரானிடம் இருந்தும்.. ஈரானின் துணை அமைப்புகளிடம் இருந்தும் பதிலடியை இஸ்ரேல் எதிர்பார்க்கிறது என்பதால் இஸ்ரேல் அதிக எச்சரிக்கையுடன் உள்ளது.

இஸ்ரேலிய இராணுவம் மூன்று அலை தாக்குதல்களில் நடத்தி உள்ளது. மொத்தமாக 20 இலக்குகளை குண்டுவீசி தாக்கியுள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானின் மேற்கு மற்றும் தென்மேற்கில் உள்ள பல இராணுவ தளங்கள் தாக்கப்பட்டுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பைடனிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மொத்தமாக 2,000 கிமீ பயணத்தை மேற்கொண்டு இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது.

இப்படி இஸ்ரேல் தாக்கிய நிலையில் அதற்கு ஈரான் மீண்டும் பதிலடி கொடுக்க முடிவு செய்து உள்ளதாம். அதன்படி ஈரான் நாட்டு அரசு தனது இராணுவ வீரர்களிடம் போருக்கு தயாராகும்படி உத்தரவிட்டு உள்ளதாம். போர் தொடர்பாக முக்கியமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாம்.

இஸ்ரேல் என்ன மாதிரியான தாக்குதல் நடத்துகிறது என்பதை பொறுத்து ஈரானின் பதிலடி மாறும் என்கிறார்கள். ஈரானின் இராணுவ தளவாடங்களை மட்டும் இஸ்ரேல் தாக்கினால் ஈரான் பதிலடி தரும்.. ஆனால் அந்த பதிலடி பெரிதாக இருக்காது. ஆனால் ஈரானின் மக்கள் இருக்கும் இடம், அணு உலைகளை இஸ்ரேல் குறி வைத்தால் ஈரான் கடுமையான பதிலடியை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

இப்படிப்பட்ட நிலையில் இன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு ஈரான் எப்படி பதிலடி தரும்.. அந்த பதிலடி எந்த அளவிற்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 100 க்கும் மேற்பட்ட விமானங்களை களமிறக்கி இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தி உள்ளது. இதில் அமெரிக்காவிடம் இருந்து வாங்கிய அதிநவீன F-35 உட்பட நவீன விமானங்களை இஸ்ரேல் பயன்படுத்தி உள்ளது.

முக்கியமாக இஸ்ரேலுக்கு சொந்தமான F-35 ‘Adir’ ஸ்டெல்த் ஃபைட்டர்கள்.. தோராயமாக 2,000 கிலோமீட்டர்கள் பயணம் செய்து இந்த தாக்குதலை நடத்தி உள்ளது. இதற்கு கண்டிப்பாக ஈரான் பதிலடி நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி மீண்டும் பிற்போடு?

இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதி வழங்குவது பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொவிட் நெருக்கடியுடன், வாகனங்களின் இறக்குமதி மார்ச் 2020...

திசைகாட்டியினால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாததாலேயே விரைவில் தேர்தல்…

தேசிய மக்கள் சக்தி கட்சி ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என புதிய ஜனநாயக முன்னணியின்...

அறுகம்பேக்கு STF களமிறக்கப்பட்டது எப்படி என ரணிலின் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருந்த போது தான் அறுகம்பே சம்பவம் தொடர்பில் முதன்முதலில் வெளிச்சத்திற்கு வந்ததாக...