இனி வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்து கனடாவில் குடியேறும் மக்களின் எண்ணிக்கையை குறைக்க தீர்மானித்துள்ளதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு கனடாவில் புலம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்கவுள்ளதாகவும் இது தற்காலிகமானது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கனடா 2024இல் 485,000ஆக உள்ள நிரந்தர புலம்பெயர்வோர் எண்ணிக்கையை 2025இல் 395,000ஆக குறைக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், அந்த எண்ணிக்கை 2026இல் 380,000 ஆகவும் 2027இல் 365,000 ஆகவும் குறையும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.