follow the truth

follow the truth

January, 3, 2025
Homeஉள்நாடுகொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

கொழும்பு, வன்னி தபால் வாக்கு பாதுகாப்பு பொதிகள் இன்று அனுப்பப்படும்

Published on

பாராளுமன்றத் தேர்தலுக்கான கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை இன்று (25) ஏற்றுக்கொள்ளவுள்ளதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் நீதிமன்ற உத்தரவு காரணமாக கொழும்பு மற்றும் வன்னி ஆகிய இரண்டு தேர்தல் மாவட்டங்களிலும் தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகளை ஏற்றுக்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவித்தலுக்கமைய பிராந்திய தபால் அத்தியட்சகர்களின் மேற்பார்வையில், உரிய தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் இன்று ஏற்றுக்கொள்ளப்படும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்தார்.

தபால் வாக்குகள் அடங்கிய பாதுகாப்பு பொதிகள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் விநியோகிக்கப்படும் என பிரதி தபால் மா அதிபர் திரு ராஜித ரணசிங்க மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்கள் இன்று முதல் ஏற்கப்படும்

உப்பு இறக்குமதிக்கான விலை மனு கோரல்களை அரசாங்கம் இன்று (03) முதல் ஏற்கவுள்ளது. இரண்டு கட்டங்களாக உப்பை இறக்குமதி செய்ய...

அரச இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுக்க புதிய வேலைத்திட்டம்

அரசாங்க இணையத்தளங்கள் முடக்கப்படுவதனை தடுப்பதற்கான முறைமையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. காவல்துறையின் உத்தியோகபூர்வ யூடியூப்...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படுமா?

அலரி மாளிகையில் கலாநிதி ஹரிணி அமரசூரிய மாகாண கல்வித் தலைவர்களைச் சந்தித்து நாட்டின் எதிர்கால கல்வித் திட்டங்கள் குறித்து...