follow the truth

follow the truth

October, 25, 2024
HomeTOP1வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

Published on

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 95 வீத அரச அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பை மேற்கொண்டுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபைக்கென 1576 அரச ஊழியர்கள் தபால் மூல வாக்களிப்புக்கென கோரியிருந்தனர். இந்நிலையில் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

திடீர் அனர்த்தம் ஏற்படுமாயின் அதற்கு முகம்கொடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 600 அரச அதிகாரிகளும் 500 பொலிஸ் அதிகாரிகளும் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

இதற்கமைய வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இன்று காலை ஆரம்பமாகவுள்ளதாக காலி மாவட்ட செயலாளர் டபிள்யு.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார். நாளை மறுதினம் எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கை மீதான தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக அவதானிக்கப்படவில்லை

அறுகம்பே உட்பட நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்ட தகவல் இஸ்ரேலிய பிரஜை ஒருவரை இலக்கு...

பொது பயன்பாட்டு ஆணையத்திடம் மின் கட்டண குறைப்பு குறித்து முன்மொழிவு

மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. குறித்த ஆணைக்குழுவின் பொருத்தமான...

கண்டி ஹோட்டல்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்படும்

கண்டியில் இஸ்ரேலியர்கள் தங்கியுள்ள சுற்றுலா விடுதிகளுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். மேலும், கண்டியில் உள்ள சுற்றுலா விடுதிகளில்...