எதிர்காலத்தில் நான்காவது கொரோனா தடுப்பூசியையும் வழங்குவதற்கான வாய்ப்புள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளரான வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி அட்டையை தரவு களஞ்சியத்திற்கு உள்வாங்கி, QR கோட் முறைமைக்குள் இணைத்து, கைத்தொலைபேசி ஊடாகவோ அல்லது வேறு முறைமையிலோ பயன்படுத்தும் வரையில், அதனைப் பாதுகாப்பாக வைத்திருப்பது கட்டாயமாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில், மூன்றாம் தடுப்பூசியின் பின்னர், நான்காம் தடுப்பூசியையும் வழங்கவேண்டி ஏற்படலாம் என்றும் எனவே, தடுப்பூசி அட்டையை லெமினேட் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.