அறுகம்பே பகுதியை மையப்படுத்தி தாக்குதல் என அரச புலனாய்வுத்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும் அதற்காக கடந்த 7ம் திகதி முதல் நாடளாவிய ரீதியாக விசேடமாக அறுகம்பே உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் நேற்றைய தினம் அரசு தரப்பு அறிவித்திருந்த நிலையில், அது உண்மைக்கு புறம்பானதாகவே காணப்படுவதாக முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.
மேலும், நாம் அறிந்த வகையில் அறுகம்பேயிலோ அல்லது தான் பிரதிநிதித்துவப்படுத்தும் மாத்தறையிலோ தென்மாகாணத்திலோ இதற்கு முன்னர் பாதுகாப்பு பலப்படுத்தப்படவில்லை குறிப்பாக நேற்றிலிருந்து தான் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம் என்றும் முன்னாள் அமைச்சர் தெரிவித்திருந்தார்
புதிய ஜனநாயக முன்னணியின் செய்தியாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“.. அறுகம்பே பற்றி வழங்கிய தகவல்களுக்காக வெளிநாட்டு தூதுவர்களுக்கு நன்றி. அறுகம்பே பகுதி பாதுகாப்பாக இருப்பதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார். அமெரிக்கா சொல்லும் வரை, பாதுகாப்புப் படைகள் சரியாக செயல்படுவதை நாங்கள் காணவில்லை…
நாங்கள் அரசிடம் பல கேள்விகளைக் கேட்கிறோம் தேசிய பாதுகாப்பு முதலிடத்தில் இருக்க வேண்டும். பாதுகாப்புச் சபையில் பங்குபற்றிய விஜித ஹேரத் வெளிவிவகார அமைச்சர் என்ற ரீதியில் தூதரகங்களுக்கு ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படி ஒரு விழிப்புணர்வு இருந்திருந்தால், இதுபோன்ற தூதர அறிவிப்புகள் இருக்காது அரசு தூதரக அதிகாரிகளை அழைத்து இது குறித்து தெரிவித்திருக்க வேண்டும்.
நேற்றைய சம்பவத்தில் இருந்து அரசாங்கம் சிறப்பாக செயற்படுவதை காணமுடிகிறது. அரசிற்கு அனுபவம் இல்லை என்று தெளிவாக தெரிகிறது.
அந்த தவறை இன்றே சரி செய்யுங்கள்…
அரசியல் உதவியாளர்களை பதவிகளில் அமர்த்தவில்லை என்று தேசிய மக்கள் சக்தி சமீபத்தில் கூறியது ஆனால் அரசியலில் இருந்த ஷானி மற்றும் ரவி ஆகியோர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள் . சுரேஷ் சாலே ஓய்வு பெற்றார்.
ஈஸ்டர் தாக்குதலின் போது ரவி மற்றும் ஷானி போன்றோர் குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்தார்கள். அதே போல் ஈஸ்டர் தாக்குதலின் போது ஷானி மற்றும் ரவி இருந்தார்கள், இப்போது அறுகம்பே சம்பவத்தின் போதும் அந்த இரண்டு அதிகாரிகளும் உள்ளனர்…”