இஸ்ரேலில் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொள்ளும் வகையில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு, மீண்டும் பணம் செலுத்துமாறு வரும் அழைப்புகளுக்கும் எமது பணியகத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக ஏற்கனவே பணம் செலுத்திய எந்தவொரு நபரும் மீண்டும் பணம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா இதனைத் தெரிவித்துள்ளார்.
பணம் செலுத்துமாறு சிலருக்கு தொலைபேசி அழைப்புகள் வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இவ்வாறான தொலைபேசி அழைப்புகளுக்கு ஏமாற வேண்டாம் எனவும், அவர்கள் கூறும் வங்கிக் கணக்குகளில் பணத்தை வைப்பிலிடுவதை தவிர்க்குமாறும், பணியகம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.