பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பெரு முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோ, பிரேசிலின் கட்டுமான நிறுவனமொன்றில் இலஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டு, 20 ஆண்டுகள் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற 78 வயதான டோலிடோ, 2001 மற்றும் 2006 க்கு இடையில் ஆண்டிய நாட்டை ஆண்டவர்.
கட்டுமான நிறுவனத்திடம் இருந்து $35 மில்லியன் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.