follow the truth

follow the truth

November, 25, 2024
HomeTOP29 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் - 67 பேர் கைது

9 மாதங்களில் 3000 முறைப்பாடுகள் – 67 பேர் கைது

Published on

2024ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு 3000 க்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஜனவரி முதல் செப்டெம்பர் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 3,045 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 81 சுற்றிவளைப்புகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 67 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 20 பொலிஸ் அதிகாரிகள், மூன்று கிராம உத்தியோகத்தர்கள், 3 காதி நீதிபதிகள், இரண்டு வருமான பரிசோதகர்கள் உட்பட 45 அரசு அதிகாரிகள் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான 237 வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வருடத்தில் 19 பிரதிவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சுஜீவ சேனசிங்க மற்றுமொரு அரசியல் முடிவில்..

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி கிடைக்காவிடின் மீண்டுமொரு அரசியல் தீர்மானத்தை எடுக்க வாய்ப்பு...

நாடு முழுவதும் பல பகுதிகளில் லாஃப் சமையல் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு

நாடு முழுவதும் பல பகுதிகளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சில டீலர்கள் பல நாட்களாக லாஃப் கேஸ் (LAUGHFS...

பொதுத் தேர்தலுக்குப் பிறகு, தேர்தல் ஆணையம் தனது பணிகளை மீண்டும் தொடங்கியது

தேர்தல் ஆணையம் இந்த வாரம் மீண்டும் கூடுகிறது. அதன்படி தேர்தல் ஆணையம் வரும் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூடுகிறது. பொதுத்...