இந்தோனேஷியாவின் புதிய ஜனாதிபதி ப்ரபோவோ சுபியன்டோ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று(21) பதவிப்பிரமாணம் செய்தது.
இந்தோனேஷியாவில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் கடந்த பிப்ரவரியில் நடந்தது. இதில், இராணுவ முன்னாள் அமைச்சரான பிரபோவோ சுபியாண்டோ அபார வெற்றி பெற்றார்.
இதற்கமைய 48 அமைச்சுகளுக்காக புதிய ஜனாதிபதி நியமித்த அமைச்சரவையில் 109 அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர்.
நாட்டின் வருடாந்த பொருளாதார அபிவிருத்தியை 8 வீதம் வரை அதிகரிப்பதே புதிய ஜனாதிபதியின் எதிர்பார்ப்பாகும் என தெரிவிக்கப்படுகின்றன.