இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன தேசிய அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஶ்ரீலங்கா கிரிக்கெட் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 1ஆம் திகதி தொடக்கம் அமுலாகும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.