புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தினர் நாளை முன்னெடுக்கவுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் நாளை தாமதமாக முன்னெடுக்கப்படுமென சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாததன் காரணமாக எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் தாம் அனைத்து சேவைகளில் இருந்து விலகி செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ரயில்வே துறையுடன் பலமுறை பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்ட போதும், தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.