ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் ரக போதைப்பொருளைத் தேயிலை அடங்கிய பொதிகளில் கொண்டுவந்த ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவிலிருந்து நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபரிடம் 10 கிலோ கிராம் 179 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.