follow the truth

follow the truth

April, 24, 2025
Homeவிளையாட்டு"எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை"

“எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை”

Published on

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டி20 தொடரை வென்றமை மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 அணியின் தலைவர் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

போட்டியின் முடிவில் நேற்று (17) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அணியில் நிலையான குழு ஒன்றினை தாம் இப்போது கொண்டிருப்பதன் மூலம் இந்த வெற்றியைப் பெற முடிந்தது என்று அங்கு அவர் கூறினார்.

மேலும் பல போட்டிகள் வர உள்ளதாகவும், அதிலும் சிறப்பாக விளையாடுவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எமக்கு இன்னும் சில வேகப்பந்து வீச்சாளர்கள் தேவை எனவும், ஆட்களை பெற்றால் நாம் ஒரு அணியாக சிறந்து விளங்க முடியும் எனவும் சரித் அசலங்க தெரிவித்துள்ளார்.

இந்த நேரத்தில் எங்கள் துடுப்பாட்ட வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டனர் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

ஏதும் உபாதைகள் ஏற்பட்டாலும் பெத்தும் நிசங்க எதிர்வரும் போட்டிகளில் பங்கேற்பார் என சரித் அசலங்க மேலும் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இன்றைய ஐபிஎல் போட்டியில் அஞ்சலி

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (23) இரவு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நடைபெறும் 41-வது லீக்...

டெல்லி – லக்னோ அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 40 ஆவது போட்டி இன்று லக்னோவில் நடைபெறவுள்ளது. குறித்த போட்டியில் டெல்லி கெப்பிடல்ஸ்...

மீண்டும் மோதும் சென்னை – மும்பை

நடப்பு ஐபிஎல் தொடரின் 38வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. ஐபிஎல்...