கட்சியின் பொதுச் செயலாளரின் கூற்றுப்படி, தொடர்பாடல் பிரச்சினை காரணமாக தனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், ஐக்கிய மக்கள் சக்தியில் பணியாற்றுபவர்கள் காது கேளாதவர்கள், எழுதத் தெரியாதவர்களா என நடிகை தமிதா அபேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் சமர்ப்பித்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தேசிய பட்டியலிலிருந்து விலகி, அதற்குப் பதிலாக தனது பெயரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
தான் கட்சியின் தலைமையினை நம்பி இருந்ததாகவும் ஆனால் தலைமை இப்போதைக்கு பொறுத்திருக்க கூறுகிறார் என்றும் தெரிவித்திருந்தார்.