follow the truth

follow the truth

January, 3, 2025
HomeTOP1சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு?

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு?

Published on

அண்மையில் அரிசி ஆலைகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை சந்தைக்கு விடுவதாக தெரிவித்த போதிலும், இன்னும் கட்டுப்பாட்டு விலையில் அரிசியை கொள்வனவு செய்ய முடியாது என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

சந்தையில் கீரி சம்பா தவிர்ந்த ஏனைய அரிசி வகைகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

சந்தையில் தற்போது அரிசிக்குத் தட்டுப்பாடு நிலவிவருவதன் காரணமாக அரிசியின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது சந்தையில் ஒரு கிலோகிராம் அரிசி 210 ரூபாய் முதல் 230 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும், ஒரு கிலோகிராம் நாடு அரிசி 220 ரூபாவுக்கும், சம்பா அரிசி 230 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுவதாகச் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அறிஞருமான ஜே. ஆர். பி.சூரியப்பெரும காலமானார். 1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி...

கொழும்பு வந்தடைந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல்

இந்த வருடத்தின் முதலாவது பயணிகள் கப்பல் இன்று (02) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. ஒஷனியா ரிவேரா என்ற அதிசொகுசு...

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம் – வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு

நுவரெலியாவில் இன்று (02) காலை முதல் கடும் பனிமூட்டமான காலநிலை காணப்படுவதால் வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இதன்...