follow the truth

follow the truth

April, 25, 2025
HomeTOP1கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

கடல் சீற்றம் தொடர்பில் சிவப்பு எச்சரிக்கை

Published on

கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக வானிலை ஆய்வு மையம் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று (16) காலை 8:00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவிப்பு நாளை (17) காலை 8:00 மணி வரை செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திரா கடற்கரையை நாளை நெருங்கும்.

சிலாபம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலையின் உயரம் 2.5-3.0 மீட்டர் வரை உயரும் சாத்தியம் காணப்படுகின்றது.

இதன்காரணமாக சிலாபத்தில் இருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் அலைகள் நிலத்தை வந்தடையும் வாய்ப்பும் உள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் அறிவிப்புகள் தொடர்பில் மீனவ மற்றும் கடல்சார் சமூகம் கவனம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க ஜனாதிபதி வத்திக்கான் தூதரகத்திற்கு விஜயம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (24) பிற்பகல்...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் மே 6ஆம் திகதி இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு மே மாதம் 5 மற்றும் 6ஆம்...

ஏப்ரல் 26 ஆம் திகதி தேசிய துக்க தினமாக அறிவிப்பு

நித்திய இளைப்பாறிய புனிதர் பிரான்சிஸ் திருத்தந்தையின் இறுதி ஆராதனையை முன்னிட்டு 2025 ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க...